வாக்குமூலம் பெறாமல் ரிஷாத் விடுதலை-முஸம்மில்

ரிஷாத் மீது எத்தனை முறைப்பாடுகள் பதியப்பட்டது ஆனால் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் ஒரு வாக்குமூலத்தைக் கூட பெறவில்லை ஆனால் அவர் விடுதலை என்று சொல்கின்றார்கள்… இவை அனைத்து நாடகம் பிரதமர் அழகிய நாடகம் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்…. என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மில் தெரிவித்தார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

முஸ்லீம் அமைச்சர்கள் சொன்னார்கள் தாம் விசாரணை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக பதவி விலகுகின்றோம் என்று , ஆனால் உண்மையிலே நடத்தப்பட்ட விசாரணைகள் என்ன? ஒரு வாக்குமூலம் கூட பெறாமல் எவ்வாறு ரிஷாதுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது ? என்ற கேள்வி எழுப்பினார் .

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

ஒருவர்மீது குற்றசாட்டுகள் முன்வைத்தால் அவரை முழுமையாக விடுதலை செய்வது நீதிமன்றம் ஆனால் அவ்வாறு எந்த குற்றசாட்டுகளும் பதியாமல் எவ்வாறு விடுதலை செயப்பட்டார் ? முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தவில்லை, வாக்குமூலம் பெறவில்லை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை அதனால் தெளிவாக எங்களுக்கு புரிகின்றது ஒன்றறை மாத காலம் இந்த அமைச்சர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது ..

தேர்தல் ஒன்று வருகின்றது என்ற உடனே மீண்டும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.. இதில் ஒரு உண்மையான விடையம் என்னவென்றால் வைத்தியர் ஷாபி விடுதலை செய்யப்பட்டார் ஆனால் ஏனையவர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டன அதேபோல ரிஷாத் அமைச்சரானார் இறந்தவர்களின் கும்பங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!