நாட்டில் ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் நுற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தால் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்றால் 30 வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் சங்க உறவுகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அரசாங்கம், 30 வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாதிருப்பதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கும் நியாயமான தீர்வை வழங்காது காலத்தை இழுத்தடிப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் பொது சந்தைக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற மாதாந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டனர். (நி)