ஹட்டனில் குப்பைப் பிரச்சனை மக்கள் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)

நுவரெலியா – ஹட்டன் நகரம் குப்பையால் சீரழிவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சிறிய சுவிஸ்சர்லாந்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் ஹட்டன் நகரம், குப்பையால் சீரழிவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக ஹட்டன் நகர சபையினரால் சேகரிக்கப்படும் குப்பைகள், ஹட்டன் நகரில் அமைந்துள்ள ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தின் ஓரத்தில் கொட்டப்படுவதனால், பல்வேறு சுகாதார பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க, மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதங்களை மறந்து முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குப்பை கொட்டுவதற்காக பல இடங்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக, சரியான இடத்தினை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் வட்டவளை பகுதியில் தனியார் காணி ஒன்றை குத்தகைக்கு பெற்று குப்பை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த போது, பௌத்த மதகுரு ஒருவரின் எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளதாக நகரசபை அதிகாரிகள் கூறியுள்ளனர். (நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!