வீட்டுத்திட்டம் கோரி நிற்கும் வவுனியா சிவபுரம் மக்கள்! (படங்கள் இணைப்பு)

வவுனியா, செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஓலை மற்றும் தகரக் கொட்டகை வீடுகளில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

சிவபுரம் கிராமத்தில் வசித்து வந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மடு பகுதியிலும் மற்றும் இந்தியாவிற்கும் சென்று அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தனர்.

அதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாக மீள திரும்பிய மக்கள், சிவபுரம் பகுதியில் மீள்குடியேறினர்.

தற்போது 300 குடும்பங்கள் வரையில் வசித்து வருகின்ற நிலையில், 100 வரையிலான குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி குடிசை வீடுகளில் வாழ்ந்து வருவதாக சிவபுரம் கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கான வீட்டுத்திட்டத்தை தந்து உதவுமாறும் மக்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!