கௌதாரிமுனையில் அகழ்வதற்கு தடை!

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கு தடைவிதித்து, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் விடுத்த உத்தரவு எதிர்வரும்
6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரி முனைப்பகுதியில் இயற்கை வளமான மணல் தொடர்ந்;தும் முறையற்;ற விதத்தில் அகழ்வது தொடர்பாக பிரதேச மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளைத் தெரிவித்திருந்தனர்.

முறைப்பாடு வழங்கப்பட்டபோதிலும், மணல் அகழ்வு தொடர்ந்த நிலையில் இம்மாத முற்பகுதியில் பூநகரி பொலிஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது இரு தரப்புக்களிடையே அமைதியின்மை ஏற்பபட்டது.

பொலிஸ் நிலையத்திற்கு முன் ஏற்பட்ட அமையின்மை தொடர்பில், பூநகரிப் பொலிஸாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து மணல் அகழ்வினை நேற்றைய தினம் வரை முன்னெடுக்க தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், இவ் வழக்கு நேற்று மீண்டும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மணல் அகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்கள் சார்பாக இளம் சட்டத்தரணிகளான சுப்பிரமணியம் சிவசூரியா, சரண்யா தாசுதன், நவரத்தினம்; பிருந்தா, கோகுலதீபன் தர்சா, ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!