அமைச்சர் ரவுஃப் ஹக்கீமின் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் உள்ள இல்லத்தில் இருந்து 60 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அமைச்சர் ரவுஃப் ஹக்கீமின் மனைவியால் கொழும்பு – கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றை விற்பனை செய்வதற்காக நபர் ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொண்ட இந்த பணத்தை, வீட்டின் அறையொன்றில் வைத்திருந்த நிலையில் காணாமல் போய் இருப்பதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவரது வீட்டில் பணியாற்றிவந்த 3 பணியாளர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கருவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சே)