மட்டு, மண்டபத்தடி விவசாயிகளுக்கு, நெல் உடைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில் உள்ள ஒன்பது விவசாயிகளுக்கு மாகாண விவசாய திணைக்களம் ஊடாக நெல் உடைக்கும் இயந்திரங்கள் இன்று பிற்பகல் வழங்கி அவைக்கப்பட்டது.


மண்டபத்தடி விவசாயப் போதனாசிரியர் ஏ.தினேஸ்காந் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி விவசாய பிரிவின் உதவி விவசாயப்பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சலீம், பாடவிதான உத்தியோகத்தர் ரூவேசினி மோகனதாஸ் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒரே இயந்திரத்தில் நெல் உடைப்பதற்கும் அரிசி மா அரைப்பதற்கும் பயன்படும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டதுடன், இவ் ஒன்பது பேருக்கும் இயந்திரம் இயக்குவது தொடர்பில் செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 விவசாயக் குடும்பங்களுக்கு இவ்வாறான 24 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில் 9 குடும்பங்களுக்கு 9 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த 9 குடும்பங்களும் எதிர்காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட இந்த உதவியைக் கொண்டு சிறந்த உற்பத்தியை மேற்கொண்டு ஒரு சங்கமாக பதிவு செய்து இயங்குவதன்மூலம் எதிர்காலத்தில் மெலும் பல நன்மைகளைப் பெற்று பல குடும்பங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையச் செய்யமுடியும் எனவும் மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!