ஜனாதிபதியால் நிதியுதவி !

2019-06-18 அன்று, பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில், வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் தலா 5 இலட்சம் ரூபா வீதம் நிதி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு, பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.


அத்துடன், 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும், பளு தூக்கும் போட்டியாளர்களுக்கான அனுசரணையாக, 5 இலட்சம் ரூபா அன்பளிப்பு செய்தல் மற்றும் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக அpதி அன்பளிப்பு மற்றும் கணனித் தொகுதிகள், இசைக் கருவிகள் ஆகியனவும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

விசேட தேவையுடைய சிறுவர்களான பெரகும் உயன, சதுர மாலிந்த மற்றும் மீகஸ்வௌ தியசென்புர, சதீப அநுகஸ் சுபசிங்ஹ ஆகியோரின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக அவர்களது பெற்றோரின் கோரிக்கையின் பேரில், ஜனாதிபதியினால் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டது.


இதேநேரம் எழுத்தாளர் எச்.எம்.குணபாலவினால் எழுத்தப்பட்ட ‘பியகுகே தாயதய’ அதாவது ஒரு தந்தையின் மரபுரிமை என்ற கவிதை நூலின் முதற்பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!