வெளிவாரி பட்டதாரிகள் 10 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாடசாலை சுற்றுமதிலை பாடசாலை சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாடசாலை சுற்றுமதில் இன்று பாடசாலை சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கம்பிரலிய திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இதற்காக பத்து இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் கிராம சேவையாளர் மன்மதன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர். (சி)