எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : நாமல்

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று, ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின், யாழ். மாவட்ட காரியாலயத்தில், கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த போது இவ்வாறு குற்றம் சுமத்தினார்.

கடந்த 30 வருடங்கள், வட கிழக்கு மக்களும், தெற்கில் வாழ்ந்த மக்களும் சொல்லெணா துன்பங்களை அனுபவித்தனர்.

அதனை நாங்கள் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதால் பயன் எதுவும் இல்லை. நாம் எமது எதிர்கால சந்ததியை வளப்படுத்த வேண்டும்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் தரமான பாடசாலைகள் இருந்தது. ஆனால் இங்கிருந்த அரசியல்வாதிகள் அந்த தரமான பாசாலைகளின் கல்வியை சீர்லைத்து, இளைஞர், யுவதிகளை போருக்குள் தள்ளினார்கள்.

இன்று அவ்வாறன நிலை இல்லை. இன்று இங்குள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.
தொழில் இல்லை. வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை, தமது உற்பத்திகளை விற்பனை செய்ய இடமில்லை.
மீனவர்களுக்கு பல பிரச்சினைகள், கூலி வேலை செய்பவர்களுக்கும் பல பிரச்சினைகள்.

இதற்கு மேலாக பட்டதாரிகளுக்கு வேலையில்லை. பாடசாலைகளில் ஆசிரியர்ள் இல்லை. தமிழ் பேசும் பொலிஸார் இல்லை. மருத்துவர் இல்லை, மருந்துகள் இல்லை. பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பிள்ளைகளுக்கும் நஞ்சை கொடுத்து தானும் நஞ்சு சாப்பிட்டு சாகும் நிலை இங்கே இருக்கின்றது.

இவை தொடர்பாக, இந்த பகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றில் பேசுவது கிடையாது.

அவர்களுடைய இலக்கு, பாராளுமன்றம் செல்வதும், வரி விலக்களிக்கப்பட்ட வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதும் மட்டுமேயாகும்.

ஜனாதிபதி, பிரதமரும் கூட அவ்வாறே ஹெலி கொப்டரில் வருகிறார்கள். ஹெலி கொப்டரில் போகிறார்கள்.
மக்களுடைய பிரச்சினைகளை பார்ப்பதில்லை.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த போது, இங்குள்ள மக்களின் பிரச்சினைகள், தேவைகளை அறிந்து கொள்வதற்காக அலுவலகம் ஒன்றை திறந்தார்.

ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அதனையும் இழுத்து மூடினார்கள். போருக்கு பின்னர், பாரிய வீதிகளை அமைத்ததும், பாலங்களை திறந்தது, புகையிரத பாதைகளை அமைத்தது மஹிந்த ராஐபக்ச தான்.

ஆனால், இன்று அவ்வாறான அபிவிருத்திகளை காணவில்லை. நாங்கள் அவ்வாறு அபிவிருத்திகளை செய்த போது, இங்குள்ள மக்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும், ஆகவே அத்தகைய அபிவிருத்திகளை இங்கு செய்யாதீர்கள் என்றும், இங்குள்ள சிலர் எங்களிடம் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் நாங்கள் பல அபிவிருத்திகளைச் செய்தோம்.

மக்களுடைய வாக்குகளை வாங்குவது மட்டும் எங்களுடைய இலக்கல்ல. தமிழ் மக்கள் நன்றி கெட்டவர்களும் அல்ல. நாங்கள் தமிழ் மக்களை நம்புகிறோம். அடுத்து வரும் ஆட்சி எங்களுடைய ஆட்சியாக நிச்சயம் அமையும்.
அதில் இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!