மன்னாரில் 6 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் !

மன்னார் – தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக, இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 6 இந்திய மீனவர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிவான் மாணிக்கவாசகம் கணேசராஜா உத்தரவிட்டார்.

இந்தியா இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், நேற்று மீன்பிடியில் ஈடுபட்ட வேளை, இலங்கை கடற்பரப்பில் வைத்து, கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையின் விசாரணைகளின் பின்னர், மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர், இன்று இந்திய மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!