காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், காணாமல்போன மீனவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

குறித்த மீனவர்கள் சென்ற படகு இயந்திரக் கோளாறு காரணமாக நீரில் மூழ்கிய நிலையில, 6 மீனவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர். எனினும் ஒரு மீனவர் கடலில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்தார்.

குறித்த மீனவரைத் தேடும்பணிகளை, பிரதேச மீனவர்களும், கடற்படையினரும் இணைந்து கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மீனவர் வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பாலசிங்கம் பரமானந்தம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!