யாழ்ப்பாணத்தில் நாமல் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்கசவின் புதல்வரும், பொதுஐன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

 

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர், இன்று காலை மதஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மதத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதற்கமைய யாழ் ஆயர் இல்லத்திற்குச் சென்று, மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்ற நாமல் குழுவினர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நல்லை ஆதீனக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சோமசுந்தர பிரமாச்சாரிய சுவாமியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

 

இதையடுத்து யாழ் நகரிலுள்ள யாழ் நாகவிகாரைக்குச் சென்ற நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர், வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், நாகவிகாரையின் விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

ஆலய வழிபாடுகள் மற்றும் மதத்தலைவர்களுடான சந்திப்புக்களைத் தொடர்ந்து, பொதுஐன பெரமுனவின் யாழ் மாவட்ட அலுவலகத்திறகுச் சென்ற நாமல் ராஜபக்ச, கட்சி உறுப்பினர்களுடன் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அவர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில், பாராளுமன்ற உறுப்பினர் றொசான், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பொதுஐன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!