நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் போர்னோ நகரில் உள்ள இறுதிச் சடங்கு நிகழ்வு ஒன்றில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளபபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதேசவாசிகள் 11 போகோ ஹராம் தீவிரவாதிகளை கொலை செய்தமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என உள்ளுர் அதிகாரியான முஹம்மெட் புலாமா தெரிவித்துள்ளார்.(சே)