சவுதி அரேபியாவின் இளவரசர் காலமானார்

சவுதி அரேபிய நாட்டின் இளவரசரும், மன்னரின் மூத்த அண்ணனுமான பந்தர் பின் அப்துல்லா அஜிஸ் அல் சவுத் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

சவுதி அரேபிய நாட்டின் மறைந்த மன்னர் அப்துல்லா அஜிஸ் அல் சவுத்தின் மூத்த மகன் இளவரசர் பந்தர் பின் அப்துலா அஜிஸ் அல் சவுத்(96) ஆவார். இவர் கடந்த 1923ம் ஆண்டு பிறந்தார்.

இளவரசர் பந்தர் எவ்வித பதவியும் ஏற்காது வாழ்ந்து வந்தார். ஆனால், இவரது மகன்கள் நாட்டின் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர். இவரது மகனான பைசல் பின் பந்தர், ரியாத்தின் ஆளுநராக இருக்கிறார்.

மற்றொரு மகனான காலித் பின் பந்தர், மன்னர் சல்மானின் ஆலோசகராக உள்ளார். மற்றொருவர் அப்துல்லா பின் பந்தர். இவர் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இளவரசர் பந்தர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று காலமானார். இளவரசர் பந்தரின் மறைவுக்கு அரபு நாட்டு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!