யாழ், கோண்டவில் பிளசம்ஸ் முன்பள்ளி விளையாட்டு விழா

யாழ்ப்பாணம் கோண்டாவில் பிளசம்ஸ் முன்பள்ளியின், 2019ஆம் ஆண்டுக்கான மழலைகள் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது.

ஆறுதல் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகர் சி.மாதவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பிள்ளை அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி nஐயா தம்பையா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

ஏனைய விருந்தினர்களாக ஆறுதல் நிறுவனத்தின் பணிப்பாளர் சுந்தரம் டிவகலாலா மற்றும் வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர் யோ.கேமநளினி, யாழ் மாநகர சபை பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து பிரதம விருந்தினர் nஐயா தம்பையா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன் பின்னர் முன்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகளும் நடைபெற்றன.

நிகழ்வில் கல்வி அதிகாரிகள், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!