கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 7 பொலிஸ் நிலையங்களிலும் சிறப்பாக சேவையாற்றிய பொலிசாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வு, இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் விஜய குணரட்ண பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பாக செயற்பட்ட பொலிசார் கௌரவிக்கப்பட்டனர். (சி)