ஸ்ரீ.சு.க புதிய அமைப்பாளர்கள் நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் சிலர் நேற்றையதினம் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.


ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நியமனம் வழங்கும் நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இதற்கமைய குருணாகல் மாவட்டத்தில், குளியாப்பிட்டி தொகுதி அமைப்பாளராக தர்மசிறி தசநாயக்கவும், பிங்கிரிய தொகுதி அமைப்பாளராக அதுல விஜேசிங்ஹவும், குருணாகல் மாவட்ட அமைப்பாளராக சம்பத் சுசந்த கெடவல கெதரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை தொகுதி அமைப்பாளராக ஸ்ரீயானி விஜேவிக்ரமவும், கல்முனை தொகுதி அமைப்பாளராக சட்டத்தரணி யூ.எம்.நிஸாரும், பொத்துவில் தொகுதி அமைப்பாளராக ஏ.எம். அப்துல் மஜீத்தும், சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக ஏ.பி. அச்சு மொஹம்மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக சட்டத்தரணி சாந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை  கொழும்பு மாவட்ட கிழக்கு அமைப்பாளராக பிரதீப் ஜயவர்தன நியனமனம் பெற்றுள்ளார்.

கம்பஹா மாவட்ட அமைப்பாளராக இந்திக ராஜபக்ஷவும், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளராக குடாபண்டார இலுக்பிடியவும், காலி கரந்தெனிய தொகுதி இணை அமைப்பாளராக ரம்ய ஸ்ரீ விஜேதுங்கவும், திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்களாக அக்ரம் மற்றும் ஜவாஹிர் ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களாக மீனா தர்ஷனி மற்றும் சுதர்ஷன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!