ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழா

ஆடிப்பிறப்பின் முக்கியத்துவம் பற்றி அறநெறிப் பாடசாலை மாணவர்கள் அறிந்து கொள்ளும் கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் கலசார திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக நாட்டில் சாந்தி சமாதானம் மற்றும் நல்ல மழை வேண்டி பிரார்த்தித்து கலாசார திணைக்களத்தின் அனுசரணையோடு அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கலாசார பிரிவு நடாத்திய ஆடிப்பிறப்பு விழா இன்று அக்கரைப்பற்று ஸ்ரீ மருதயடிமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் க.சோமசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் கலாசார உத்தியோகத்தர்களான திருமதி.ரி.நிசாந்தினி திருமதி.பி.நவப்பிரியா நகுலா விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீ மருதயடிமாணிக்கப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆலய நிருவாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கூட்டுப்பிரார்த்தனையுடன் ஆரம்பமான விழாவில் ஆடிப்பிறப்பு விழா தொடர்பான விளக்கவுரையினை நிருவாக உத்தியோகத்தர் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் வழங்கினர்.

பின்னர் ஆடிப்பிறப்பில் அம்மன் விரும்பி உண்ணும் கூழ் கொழுக்கட்டைகள் பக்தர்களால் தயாரிக்கப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மனுக்கு படைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அறநெறி மாணவர்களுக்கும் மக்களும் பிரசாதம் வழங்கப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!