பல்கலைக்கழக வளாகத்தில் தீப்பரவல்

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட தீ ஏற்பட்டுள்ளது.
வவுனியா வளாகத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில், பற்றைக்காடுகளாக காணப்பட்ட பகுதியிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் கடும் காற்று மற்றும் வெயில் காரணமாக தீ வேகமாக பரவியதை அடுத்து அதனை, கட்டுப்படுத்துவதற்காக வவுனியா நகரசபையின் தீ அணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் பிரிவினர், கடும் பிரயத்தனத்திற்கு பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, வவுனியா வளாகத்தின் கட்டடத்தொகுதிக்கு தீ பரவாது தடுக்கப்பட்டதால், பாரிய சேதங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!