மட்டு. உன்னிச்சை நெடியமடு கிராமங்களில் விவசாயிகளின் பயிர்களை அழித்து இரண்டாவது நாளாகவும் காட்டுயானைகள் அட்டகாசம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை நெடியமடு கிராமங்களில் இன்று அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து அங்கிருந்த விவசாயிகள் மூவரின் பயிர்களையும் தென்னைமரங்களையும் அழித்துவிட்டு சென்றுள்ளது.
இதேபோன்று, நேற்றய தினம் அதிகாலையில் இப்பிரசேத்தில் மற்றுமொறு தென்னந்தோப்பினை காட்டு யானைகள் அழித்துவிட்டு சென்றதனை எமது செய்திச் சேவைக்கூடாக வெளியிட்டுருந்தோம்.
இரண்டாம் நாளான இன்று அதிகாலை 2 மணியளவில் கிராமத்திற்குள் அமைந்துள்ள குறித்த விவசாயிகளின் மூன்று தோட்டத்தினுள் சில காட்டுயானைகள் ஊடுருவி அங்குள்ள பயிர்வகைகளையும் தென்னை மரங்களையும் அழித்து துவசம் செய்துள்ளது.
இக்கிராம மக்கள் அன்றாடம் காட்டு யானைகளின் தொல்லையால் தமது பிள்ளைகளுடன் இரவில் தூக்கமின்றி உயிருக்கு பயந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
கிராமங்களின் அருகிலுள்ள காடுகளில்தான் குறித்த காட்டுயானைகள் தற்போது தங்கியிருப்பதாகவும், அதனை தூர இடங்களிலுள்ள பெரிய காடுகளுக்கு துரத்திவிடும்படியும், யானை பாதுகாப்பு வேலியினை சீர் செய்து தரும்படியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக கோரி நிற்கின்றனர். (சி)