பாராளுமன்ற செலவு குறித்து சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் : ரத்நாயக்க

பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்கள் மாத்திரம் செலவு செய்யபடுவதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா கினிகத்தேன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க,

‘பாராளுமன்றத்தில் அங்கம் வைக்கின்ற 225 உறுப்பினர்களும்இந்த முறைபாட்டினை தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில்உத்தியோகத்தர்கள் உள்ளார்கள்.

அதேபோல் பொலிஸார் இருக்கின்றனர். பாராளுமன்ற அமர்வு இடம்பெருகின்ற போது ஊடகவியலாளர்கள் வருவார்கள்.
எனவே இவர்கள் அனைவரையும் கனக்கெடுப்பு செய்தால் 1500கும் மேற்படடவர்களுக்கு உணவு மற்றும் தேனீர் என்பன வழங்கபட வேண்டிய தேவை இருக்கிறது.

அவர்களுக்கு காலை மதியம் இரவு நேரத்திற்கான உணவும் தேனீரும் வழங்கப்படுகிறது. இதற்கான அனைத்து செலவுகளும் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மாத்திரம் அல்ல உத்தியோகத்தர்களுக்கும் சேர்த்தே செலவு செய்யபடுவகிறது.

பாராளுமன்றத்தில் 1500 உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். எனவே இதற்கான செலவினை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சமத்துவது பிழையான விடயம்.

சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்தில் இவ்வாறு தான் செலவு செய்யப்படுகிறது என்ற விடயத்தினை இந்த நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் உத்தியோகத்தர்கள் 803பேர் உள்ளனர். பொலிஸார் 223 பேர், ஊடக மத்திய நிலையம் ஆயுர்வேத மத்திய நிலையம் இலங்கை வங்கி உள்ளது.

இது போன்ற இன்னும் பல உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். ஆனால் பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதத்தில் பத்து நாட்கள் மாத்திரமே இருப்பார்கள்.

இவ்வாறு வீண்விரயம் செய்யபடுவதாக கூறினால் நாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக மக்கள் நினைப்பார்கள்’ என  குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!