24 மணிநேரத்தில் 219 சாரதிகள் கைது!

நாட்டில் 24 மணிநேர காலத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 5 ஆயிரத்து 924 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!