ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் நாளை ஆரம்பம்!

பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளையும், ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்களையும் நாளைய தினம் ஆரம்பிக்க தட்டமிடப்பட்டுள்ளது.

ருகுணு பல்கலைகழத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடங்கள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள அதேவேளை, முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் இறுதி ஆண்டின் கல்வி நடவடிக்கைகளும் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளது.

முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் இராண்டாம் வருட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில், முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று ருகுணு பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடம் நாளை திறக்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவித்துள்ளார்.

இதனால் முகாமைத்துவ பீட மாணவர்கள் இன்றைய தினம் பல்கலைக்கழக விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (ந்)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!