பிலிப்பின்ஸில் நேற்று ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
பிலிப்பின்ஸின் வடக்கே அமைந்துள்ள படானெஸ் மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு பின்னதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கம் மற்றும் அதிர்வுகள் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில், இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். (நி)