மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை!

மும்பையில் பெய்து வரும் கன மழையை அடுத்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இன்றும் நாளையும் அதிக கனமழை பெய்யும் என்பதால் மும்பையில் வசிக்கும் மக்களுக்கு இந்திய வானிலை மையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தற்போது மகாராஷ்டிரம், அஸாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது.

நேற்று முன் தினம் மாலை முதல் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் வீதிகள், மற்றும் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இதேவேளை, உள்ளூர் ரயில் சேவை வழக்கம் போன்று இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வானிலையில் தெளிவற்றத்தன்மை இருப்பதால் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 9 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, தானே, ராய்காட், பால்கர், மும்பை ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்தள்ளது.

இதேவேளை காற்று 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்பதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!