கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று மாலை மூன்று மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொழும்பு-05, கொழும்பு-07, கொழும்பு-08 ஆகிய பகுதிகளுக்கே நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு காலங்களில் கொழும்பு-03, கொழும்பு-04 மற்றும் கொழும்பு-06 பகுதிகளில் நீர்விநியோக வேகம் குறைவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (நி)