காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க சர்வதேசம் உதவ வேண்டும்!(காணொளி இணைப்பு)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கும் வரை போராடுவோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு சர்வதேசம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

முல்லைத்தீவில் தனது மகனை தேடி அலைந்த தாய் ஒருவர், தனது மகனை காணாத நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலைமை ஏனையவர்களுக்கும் ஏற்படாத வகையில் சர்வதேசம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று அமலநாயகி கேட்டுக்கொண்டுள்ளார். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!