மன்னாரில் விழ்ப்புணர்வு செயலமர்வு!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான இரண்டாம் நாள் விழ்ப்புணர்வு செயலமர்வு மன்னாரில் இன்று இடம்பெறுகின்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான இரண்டு நாள் விழ்ப்புணர்வு செயலமர்வு மன்னாரில் நேற்று ஆரம்பமான நிலையில் செயலமர்வின் இறுதிநாள் இன்று இடம்பெறுகின்றது.

மன்னார் தாழ்வுப்பாடு கீரியில் உள்ள ஞானோதய வாளகத்தில் உள்ள ஒன்று கூடல் மண்டபத்தில் விழ்ப்புணர்வு செயலமர்வு நடைபெறுகின்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வட கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தலமையில் நேற்றைய தினம் செயலமர்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நேற்றைய செயலமர்வில், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர்கள், தலைவிகள், மாவட்ட மீனவ ஒத்துளைப்பு இயக்க தலைவர்கள், கடற்தொழிலாளர்கள் சங்கபிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற செயலமர்வில் வளவாளராக இலங்கை சட்ட ஆலோசனை ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி செல்வி கௌமிகா கோபலிங்கம் கலந்துகொண்டார். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!