போரின் பின் பறிபோகும் முல்லைத்தீவு மாவட்ட வளங்கள்!

முல்லைத்தீவு மாவட்ட இயற்கை வளங்கள் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் மிகவும் மோசமான முறையில் அழிக்கப்பட்டுவருவதாவும், இது தொடர்பில் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக, கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு என்பன அதிகரித்து வந்தநிலையில் தற்போது சட்ட விரோத மணல் அகழ்வு பல இடங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக துணுக்காய், கரைதுரைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலேயே, சட்டவிரோத மணல் அகழ்வு மிக தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.

இது தொடர்பில் அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கடந்த காலங்களில் பேசப்பட்டபோதும் உரிய தலைமைகளால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எமது செய்தியாளரும் தெரிவித்திருந்துள்ளார். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!