முல்லைத்தீவு – மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலையை இயங்க வைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துணுக்காய் வெள்ளாங்குளம் வீதியின் ஓரமாக பல மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட அரைக்கும் ஆலை, பல ஆண்டு காலமாக திறக்கப்படாது அழிவடைந்து செல்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அரைக்கும் ஆலையை உரிய முறையில் திறந்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக துணுக்காய் பிரதேச மக்கள் நன்மையடைவர் என தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த அரைக்கும் ஆலையை மிக விரைவாக இயங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (நி)