நுவரெலியா மாவட்டம் ஹட்டன் ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையை அரச வைத்தியசாலையாக தரமுயர்த்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
லெதண்டி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பங்களா டிவிசனில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையை அரச வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரத்தின் 05 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)