யாழ் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தினால் கணணிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ  உயர் அதிகாரிகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் எண்ணக்கருவில் 10 கணினிகள் யாழ் மாவட்டத்தில் செயற்படும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்தும் முகமாக இந்த கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் கணினிகள் மூலம் இலகுவாக இராணுவத்தினர் தமது கடமைகளை புரிவதற்காக   இந்த பத்து கணினிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.(ம)

Recommended For You

About the Author: KUKAN

error: Content is protected !!