மூன்று விக்கட்டுகளுடன் ஓய்வு பெற்றார் மலிங்க

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பாமன முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை குவித்தது.

315 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 41.4 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 91 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் அணி சார்பில் அணித் தலைவர் தமீம் இக்பால் டக்கவுட்டுடனும், சவுமி சர்கார் 15 ஓட்டத்துடனும், மொஹமட் மிதுன் 10 ஓட்டத்துடனும், மாமதுல்லா 3 ஓட்டத்துடனும், சபீர் ரஹ்மான் 60 ஓட்டத்துடனும், மொஸாடிக் ஹூசேன் 12 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் 2 ஓட்டத்துடனும், முஷ்தாபிகுர் ரஹும் 67 ஓட்டத்துடனும், சைபுல் இஷ்லாம் 2 ஓட்டத்துடனும், முஷ்தாபிசுர் ரஹ்மான் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், ரூபல் ஹூசேன் 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப் மற்றும் லசித் மலிங்க தலா 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 2 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இந்த வெற்றியுடன் லசித் மலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.

2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த லசித் மலிங்க இதுவரை 329 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 536 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.(சே)

30 டெஸ்ட் போட்டி  – 101 விக்கெட்

226ஒருநாள் போட்டி – 338 விக்கெட்

13 இருபதுக்கு -20 போட்டி – 97 விக்கெட்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!