நேபாளத்தில் தொடரும் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆகா உயர்ந்துள்ளது
நேபாளத்தில் பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகபலத்த மலை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
நேபாளத்தில் மொத்தம் உள்ள 77 மாவட்டங்களில் 64 மாவட்டங்கள் கனமழையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 67 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், இதுவரை 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.(சே)