ஜனாதிபதி முல்லேரியாவிற்கு விஜயம்!

முல்லேரியாவில் அறநெறி பாடசாலை மற்றும் சமய உரை கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

முல்லேரியா மண்டவில ஸ்ரீ அபய சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி அறநெறி பாடசாலை மற்றும் சமய உரை கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் திறந்து வைத்தார்.

மண்டவில ஸ்ரீ அபய சுமனாராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் விகாராதிபதி சங்கைக்குரிய சுபோதானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் தியவதன நிலமே நிலங்கதேல, பிரசன்ன சோலங்கஆரச்சி, ஹெக்டர் பெதமகே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். (நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!