7 கைக்குண்டுகள் மீட்பு

யாழ்.கொழும்புத்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று (30) மீட்கப்பட்டுள்ளன.

கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழியை துப்பரவு செய்த போது குறித்த குழியினுள் கைக்குண்டுகள் காணப்பட்டதையடுத்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த குழிக்குள் இருந்து 7 கைக்குண்டுகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Webadmin

error: Content is protected !!