ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பேணிப் பாதுகாப்பதற்கு, இலங்கை மக்கள் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட வேண்டும் என, அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், சங்கங்களை அமைப்பதற்குமான உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தின் இறுதியில், இன்று கொழும்பில் தனது ஆரம்ப அறிக்கையை வெளியிட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘இலங்கை பல சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளின் பங்குதாரத்தரப்பு நாடாகும். எனவே, அரசு பல மனித உரிமைக் கடப்பாடுகளைக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக அரசிற்;குப் பல தெளிவான கடப்பாடுகள் உண்டு. இக்கடப்பாடுகளைப் பிரதிபலிப்பதற்கு பல சட்டவாக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இக்கடப்பாடுகளை முழுமையாக அடைவதற்கு சமூகத்தின் பிரிவினைகள் அச்சுறுத்தலாக அமைகின்றன.’
ஜனநாயக ரீதியான நன்மைகளின் பின்னடைவுகள் பற்றிய பரந்துபட்ட அச்சுறுத்தல்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளாளும் தெரிவிக்கப்பட்டமை விசேட நிபுணரைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.’
சுதந்திரத்திற்கான மக்களின் அபிலாசைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் தலைவர்கள் நிராகரிக்க கூடாதென்பது மிக முக்கியமானது.
போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை, எதிர்வரும் தேர்தல்களின் போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது.
அமைதியாக ஒன்றுகூடல், சங்கங்களை அமைக்கும் சுதந்திரம் என்பன, இலங்கை அரசியல் அமைப்பில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.
ஆனால், தண்டனைச் சட்டக் கோவை, சிவில் அரசியல் உரிமைகளுகக்hன சர்வதேச் சமவாயச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன மேற்படி உரிமைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் வாய்ப்புக்களை உண்டு பண்ணும் என்பதையும், குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபாலியலாளர்கள், நிலைமாறு பால்நிலை சமூகத்தினருக்கு எதிராக அலைந்து திரிவோருக்கானக் கட்டளைச் சட்டம் பயன்படுத்தப்படுவதும் விசேட அறிக்கையாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
‘காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக, பாரபட்சமான முறையில் இச் சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது மீதும் எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
‘ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களையும்;, ஆர்ப்பாட்டங்களின் போது பங்குபற்றுனர்கள்; முன்வைக்கும் பிரச்சினைகளையிட்டும் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் பேரழிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பயங்கரவாதத் தாக்குதல், அதேசமயம் சென்ற ஆண்டு அரசியல் அமைப்பு ரீதியான நெருக்கடிகள் என்பன ஏற்பட்ட ஒரு சூழமைவில், அதற்கு மேலதிகமாக தற்போதைய அவசரகாலச் சட்டங்களின் பிரயோகம் என்பன மன அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
சிவில் சமூகத்தின் சில உறுப்பினரக்ள் தமது நடவடிகi;ககளை முன்னெடுப்பதிலும் அமைதியாக ஒன்றுகூடுவதிலும் பல கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
இத்தகைய பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கியுள்ள ஒரு தீர்மானகரமான காலகட்டத்திலேயே, விசேட அறிக்கையாளரின் விஜயம் அமைந்துள்ளது.
அண்மையில் பல சட்டவாக்கச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களும் முன்வைக்கப்படடு;ள்ளன.
அதேசமயம் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், சகல தொழிற்சட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்கான சட்டமூலம் இவற்றுள் சிலவாகும்.
எவ்வாறாயினும் சிவில் சமூக பரப்புரையாளர்கள் முன்வைத்த கடுமையான எதிர்ப்புக் காரணமாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள உரிமைகள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி சட்ட மூலங்கள் போதிய பங்கேற்பு ஆலோசனை இன்றி வரையப்பட்டதாகவும் சிவில் சமூகப் பரப்புரையாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.
‘இத்தகைய எதிர்ப்பு இயக்கங்களை அடுத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலம் குறிப்பிட்ட அமைச்சரினால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதோடு, சிவில் சமூகம் தமது சட்ட வரைபை கலந்துரையாடலுக்கு முன்வைப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது.’
2009 இல் ஓய்ந்த, நீண்ட கால அழிவுகரமான யுத்தத்தின் பின்னர், பாதுகாப்புத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை, சிவில் சமூகம் இயங்குவதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும், ஏனைய சிவில் சமூக நடவடிக்கைகள் பற்றியும்; தொடர்ச்சியான புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதன் காரணமாக, மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீது தொந்தரவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள நிலைமை அறிக்கையிடப்படடுள்ளது.
‘மக்கள் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையையும் சங்கங்கள் அமைப்பதற்கான உரிமையையும் முன்னெடுக்கும் போது, நாட்டின் சில பிரதேசங்களில், நடந்த கடந்த கால நடைமுறைகள் நினைவூட்டப்படுகின்ற அதேவேளை, அச்சத்தையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களின் பின்னர், ”ஐ.சி.சி.பி.ஆர் 2007 சட்டத்தின் கீழ் பகைமை உணர்ச்சியைத் தூண்டும் உரைகளைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருப்பினும், பாரபட்சமற்ற முறையில் அவை வலியுறுத்தும் வகையில் அமையவில்லை.
அதேசமயம், பாரபட்சமான முறையில், குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தோரின் பகைமை உணர்ச்சியைத் தூண்டும் உரைகளுக்கு, எதுவிதமான தண்டனையும் வழங்கப்படுவதில்லை.
சமூக ஊடகங்களின் குறிப்பாகத் தவறான தகவல்களையும் பகைமை உணர்ச்சியையும் தூண்டும் வகையிலான தகவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
பிரதிநிதித்துவ ஜனநாயக சமூகத்தில் மரியாதையுடனும் அமைதியுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதில் இது பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது’
என குறிப்பிட்டள்ளார்.
இதேவேளை அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், சங்கங்களை அமைப்பதற்குமான உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல், இலங்கை விஜயத்தின் போது, வடக்கு, தெற்கு கிழக்கு மற்றும் தலைநகரான கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.
அவர் அரசாங்க அதிகாரிகளையும், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், தொழிற்சங்கங்களையும் ஏனையோரையும் சந்தித்தார்.
அவரின் விஜயத்திற்கு முன்னரும் விஜயத்தின் போதும் இலங்கை அரசாங்கம் காட்டிய ஒத்துழைப்பையிட்டு நன்றி தெரிவித்தார்.
விசேட அறிக்கையாளரின் முடிவுகளும் பரிந்துரைகளும், 2020 ஜூன் மாதத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (சி)