இலங்கை அமைச்சர்கள் இருவர் இந்தியாவிற்கு பயணம்!

5ஆவது சர்வதேச தர்ம-தம்ம மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசன் மற்றும் புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் அதில் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய பீஹார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிரில் நகரில் குறித்த இந்து பௌத்த சர்வதேச மாநாடு நாளையதினம் ஆரம்பமாகி, நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொண்டு இலங்கை சார்பாக உரையாற்ற, பாராதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனடிப்படையிலேயே, இலங்கையில் பௌத்த மதம், மற்றும் இந்து சமயம் ஆகியவற்றிற்கு பொறுப்பான அமைச்சர்களாக உள்ள காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் மனோ கணேசன் ஆகியோர் மாநாட்டில் பங்குகொள்வதற்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!