விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது .

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு, கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது.

 

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!