கண்ணகிபுரம் முருகன் மலை கோவிலை புனருத்தாரனம் செய்து தருமாறு கிராமவாசிகள் கேரிக்கை

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் முருகன் மலையானது பிரதேசத்தின் தொல்லியல் சான்றாக திகழ்கின்றது.

குறித்த மலையில் கடந்த கால நூற்றாண்டுகளில் காணப்பட்ட இராசதானிகளின் சாயலில் மலைகளில் செதுக்கல் வேலைப்பாடுகள் நடைபெற்று படிக்கட்டுகள் உருவாக்கி இலகுவாக மலை உச்சியினை அடைந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றது.

அத்துடன் மலையில் மேற்பாகத்தில் சம இடைவெளி அளவில் சதுமரான துவாரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றதுடன் இத்துவாரங்கள் மன்னராட்சி காலத்தில் மலை மீது கூடாரங்கள், அல்லது தீபந்தங்களை நட உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் இன்னும் பல புராதானச்சின்னங்கள் இங்கு இருக்கலாம் எனவும் பிரதேச வாசிகள் கருத்து தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாது 25 அடி ஆளமான ஒரு நீர் தடாகமும் காணப்படுகின்றது ,ந் தடாகமானது எவ்விதமான வறட்சி காலங்களிலும் வற்றாத ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தெல் பொருள் திணைக்களத்தின் கீழ் தெல்லியல் பூமியாக இவ் ஆலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை பிரதேசத்தின் தொல்பொருள் தன்மையை பறைசாற்றுகின்றது.

கடந்த யுத்த காலத்தில் இவ் ஆலயமானது விஷேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததாகவும் யுத்தம் முடிவுற்ற பின்னர் மக்கள் வழிபாட்டிற்கு வழங்கப்பட்டதுடன் கிராம மக்களது நிதியுதவியுடன் இன்று வரை இயங்கி வருவதாகவும் ஆலையத்தின் புனருத்தாரன வேலைப்படுகளை மேற் கொள்ள தனவந்தர்களும் அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும் என ஆலய நிர்வாகி எமது டான் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!