திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாணவி உட்பட ஜந்து பேர் தற்கொலை

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாணவி உட்பட ஜந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்கள் தம்பட்டை, விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில், காயத்திரிகிராமம் மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு மாணவியுட்பட் நான்கு ஆண்களுமாக ஜந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்கள் வயது வித்தியாசமின்றி இளையவர்கள் முதியவர்கள் என தற்கொலை செய்து கொண்டு இருப்பதுடன் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் முறையான உளவள ஆற்றுப்படுத்தல் ஊடாக இவ்வாறான தற்கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வளர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமைமாலை (25) தங்கவேலாயுதபுரம் உடுப்பங்குளம் வீதியைச் சேர்ந்த 14வயதுடைய மாணவி ஒருவர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!