திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கச்சக்கொடுத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள மரத்தளபாட நிலையமொன்றில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மரத்தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில், இன்று அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் திருகோணமலை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா நகர சபை, பிரதேச சபையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து தீயினை இன்று காலை 9 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.