திருகோணமலையில், தொண்டர் ஆசிரியர்கள் அமைதி ஊர்வலம்

தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனத்தின் போது உள்வாங்கப்படாத, கிழக்கு மாகாணத்தை தொண்டர் ஆசிரியர்கள், இன்று நிரந்தர நியமனம் கோரி, திருகோணமலையில் அமைதியான முறையில் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தை சேர்ந்த 245 ற்கும் அதிகமான பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள், இந்து கலாசார மண்டபத்தின் அருகில் இருந்து, கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் வரை, அமைதி ஊர்வலத்தை மேற்கொண்டனர்.

2018 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக, தொண்டர் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில், 2004 முதல் 2007 டிசம்பர் வரை சேவையாற்றியவர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டதாகவும், 1999 முதல் 2006 வரை சேவை புரிந்தவர்கள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்,யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளின் போது சேவை புரிந்தவர்கள், நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் போது, பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தினர் ஒவ்வொருவரையும் அழைத்து, தொண்டர் ஆசிரியர்களின் புத்தக திரட்டு, நேரசூசி, சேவைக்கான கடிதம் என்பவற்றை பரிசீலனை செய்து, நிரந்தர நியமனம் வழங்க கோரி, கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக, கல்வி அமைச்சுக்கும் மகஜர் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!