உயர்நீதிமன்ற நீதியரசர்கள், இலங்கை வைத்திய சபைக்கு பிறப்பித்த உத்தரவு

ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், வைத்திய பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகளை, பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, உயர்நீதிமன்றம் இலங்கை வைத்திய சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வைத்திய பட்டத்தை பெற்ற 16 மாணவர்கள் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவுக்கு தீர்வை வழங்கி, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தாம் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வைத்திய பட்டத்தை பெற்றிருந்த போதிலும், வைத்தியத் தொழிலுக்காக பதிவு செய்வது, இலங்கை வைத்திய சபையினால் நிராகரிக்கப்பட்டதாக, மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, உத்தரவு ஒன்றை வைத்திய சங்கத்துக்கு பிறப்பிக்குமாறும் அவர்கள் கோரியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று உயர்நீதிமன்றில், நீதியரசர்களான பிரசன்ன ஜெயவர்த்தன, எல்.ரி.பி தெஹி தெனிய மற்றும் மூர்த்து பெர்னான்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழு முன்னால், குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வைத்திய தொழில் தகுதியை பெற்று, வெட்டுப்புள்ளி பரீட்சையில் சித்தி பெறும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வைத்திய பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இலங்கை வைத்திய சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!