இஸ்லாமிய மாநாட்டுக்கு, பொதுபல சேனா தடை

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், அதனை நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர், கடந்த 14 ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்குச் சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தார்.

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் ஒருபோதும் நடாத்தக்கூடாது எனக் கூறுகின்றோம்.

சவுதிக்கு வேண்டியவாறு இந்த நாடு செயற்படத் தேவையில்லை. சவுதியின் செல்வாக்குக்கு உட்பட்டு இந்த நாடு இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் இஸ்லாம் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவப்புத் தம்பிகள் மௌனம் சாதிக்கின்றனர்.

விசேடமாக மொரட்டுவ பல்கலைக்கழகம், ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பவற்றை இதற்கு முன்னுதாரணமாக குறிப்பிடலாம். இவற்றில் நடைபெறும் அடிப்படைவாத நடவடிக்கைகளை சாட்சியுடன் நிரூபிக்கலாம்.

இந்தப் பல்கலைக்கழகங்களில் வஹாப் வாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேறு மாணவர் அமைப்புக்களுக்கும் இந்த விடயங்கள் தென்படுவதில்லை. மூச்சுக் குழாய்கள் சிவப்பாக இருக்கும் சிவப்புத் தம்பிகளுக்கு அவர்களது எதிர்காலம்தான் அழிந்துகொண்டிருப்பது விளங்குதில்லை. என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!