கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பேலி சிவனாலய மண்டபம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கெற்பேலி சிவனாலயத்திற்கு மண்டபம் நிர்மாணிப்பதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், 15 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கியிருந்தார். இந்நிலையிலேயே இன்று ஆலய மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் குமாரு சர்வானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்மராட்சி இளைஞர் அணித் தலைவர் லயன் இரத்தினம் கோகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை குறித்த மண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுடனும், அப்பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)