தபால் ஊழியர்களின் புதிய சம்பள உயர்வு குறித்து நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலும் சம்பள உயர்த்தப்படாது இருப்பதால் எதிர்வரும் வாரமும் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேவையாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களில் எண்ணிக்கைகளை கவனத்தில் கொள்ளும் பொழுது தபால் நிலைய ஊழியர்களுக்காக மட்டும் சம்பள உயர்வினை வழங்குவது பெறுத்தமானது அல்ல என்ற முடிவு நேற்று அமைச்சரவையில் எட்டப்பட்டுள்ளது.
எனினும் கூட்டு தபால் தொழிற்சங்க முன்னனியின் ஒருங்கினைப்பாளர் சிந்தக பண்டார நாளை நடைபெற உள்ள சிறப்பு குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய உள்ளதாகவும் தெரிவித்தார். (சே)