மத்திய மாகாணத்தில், சொற்பிழையுடன் வினாத்தாள்

மத்திய மாகாணத்தில் 2019ம்ஆண்டுக்கான இரண்டாம் தவனை பரீட்சைக்கு, மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைக்கு அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கபட்டுள்ள, நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்திற்கான வினாத்தாளில் அனேகமான சொற்பிழை காணப்பட்டதாக மாணவர்களும், ஆசிரியர்களும் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இதனால் இன்று தரம் 10 மாணவர்களுக்கான பரீட்சை நடைபெற்றபோது, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மத்திய மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு தரம்-10ற்கான நடகமும் அரங்கியலும் பாடத்திற்கான வினாத்தாள் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும், ஆசிரியர்களால் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி, பரீட்சைக்கு மாணவர்களை தோற்ற வைத்ததாக அதிபர்களும், ஆசிரியர்களும் மேலும் குற்றம்சுமத்தியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!