மட்டு. கூழாவடி வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி முதலாம் குறுக்கில் உள்ள உள்ளக வீதி கொங்கிறிட் இட்டு புனரமைக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கம்பிரலிய திட்டத்தின் கீழ் இந்த வீதியை மட்டக்களப்பு மாநகரசபை கொங்கிறீட் இட்டு புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனிடம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இதற்கென 15 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீதி புனரமைப்பு பணிகளை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான துரைசிங்கம் மதன், இராஜந்திரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

மிகவும் நீண்டகாலமாக இந்த வீதி புனரமைக்கப்படாத நிலையில் இன்று புனரமைக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!